ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சோகம்
கணவரை பிரிந்த புதுப்பெண், தூக்கிலிட்டு தற்கொலை.
போலீசார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம்,
ராஜபாளையம் அடுத்த உள்ள இனாம்செட்டிகுளம் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருடைய தங்கை முத்துலட்சுமி (வயது 25) நர்ஸிங் படித்த இவர் கடந்த மாதங்களுக்கு முன்பு ராஜபாளையம் அருகேயுள்ள மேல் ஆவாரந்தையை சேர்ந்த கோபிநாத் என்பவரை. காதலித்து வந்தார். இந்த காதலுக்கு வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்திலையில் கடந்த 4
மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய காதல் ஜோடி சென்னையில் திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது.
இதையடுத்து அவர்கள். அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் பகுதியில் வசித்து வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும்.
இதனால் கணவரை பிரிந்து முத்துலட்சுமி ராஜபாளையம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக முத்துலட்சுமி மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கொழிஞ்சி பட்டி தெருவில் உள்ள தனது பெரியம்மா வீட்டிறகு வந்தவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த பெற்றோரின் புகாரின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து
முத்துலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.