ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் ஹரிஷ் மல்கோத்ரா ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெருநிறுவனங்கள் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை மத்திய இணை அமைச்சர் ஹரிஷ் மல்கோத்ரா ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தரம் குறித்தும், மருத்துவமனையில் வழங்கும் மருந்துகள் குறித்தும், நோயாளிகளுக்கு கொடுக்கும் உணவுகளின் தரம் குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நகர்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், மருத்துவச் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.