ஸ்ரீவி: விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை துவக்கம் - இணைஅமைச்சர்

73பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூரில் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களால் முன்னேற்றம் அடையும் மாவட்டங்களில் இருந்து விருதுநகர் விரைவில் வெளியேறும் என மத்திய இணை அமைச்சர் ஹரிஷ் மல்கோத்ரா நம்பிக்கை தெரிவித்தார். மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களால் முன்னேற்றம் அடையும் மாவட்டங்கள் திட்டத்திலிருந்து விருதுநகர் விரைவில் வெளியேறும், என மத்திய இணை அமைச்சர் ஹரிஷ் மல்கோத்ரா தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய முன்னேற்றம் அடையும் மாவட்டங்கள் திட்டத்தில் உள்ள மாவட்டங்களில் அனைத்து அமைச்சர்களும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து மத்திய மாநில அரசுகளின் திட்டச் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்த பின் தமிழகத்தில் 41 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள், பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் தமிழகத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளும், தூய்மை இந்தியா திட்டத்தில் 59 லட்சம் வீடுகளில் கழிப்பறைகளும், ஜல்ஜீவன் திட்டத்தில் 89 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

தொடர்புடைய செய்தி