ஸ்ரீவில்லிபுத்தூருக்குஉலக அமைதி குழு வெளிநாட்டவர்கள் வருகை. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.
விருதுநகர் மாவட்டம், சங்கரன்கோவில் உலக அமைதி புத்தர் கோவில் உலக அமைதி மற்றும் அகிம்சைக்கான பாதயாத்திரை கடந்த 12ஆம் தேதி மதுரை காந்தி மியூசியத்தில் வைத்து தொடங்கியது. இந்த குழு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இன்று வருகை புரிந்தனர். இந்தக் குழுவில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ரவிச்சந்திரன் காந்தி மியூசியம் காப்பாளர் நந்தாராவ் மற்றும் பாதயாத்திரை ஒருங்கிணைப்பாளர் நடராஜன் மற்றும் இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், போலந்து,
தென்கொரியா, இலங்கை, நேபாளம், ஆகிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் புத்தபிக்குகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகே வருகை தந்த பாதயாத்திரை குழுவுக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு வழங்கினார். அப்பொழுது பாதயாத்திரை குழுவினர் உலக அமைதிக்கான ஜப்பான் மொழியிலான பாடல்களை பாடி வந்தவர்களை தனியார் நிறுவனம் சார்பில் பாதயாத்திரை குழுவிற்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டு மரியாதை செய்தனர். தொடர்ந்து இந்த பாதயாத்திரை குழுவினர் ஆண்டாள் கோவில் ராஜகோபுரம் முன்பு நின்று வழிபாடு செய்தனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் வீதிகளில் வெளிநாட்டினர் பாதையாத்திரை சென்ற சம்பவம் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.