ஸ்ரீவி: பாரில் இளைஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது...

62பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துாரில் குடிபோதையிலிருந்த 27 வயது இளைஞர் அடித்துக் கொலை. பார் உரிமையாளர் உட்பட, 4 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி சித்துராஜபுரத்தைச் சேர்ந்த கூலிதொழிலாளியான மாயன் (27) இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் இருவருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கூரணி அருகே டாஸ்மாக் கடை அதனுடன் பார் இயங்கி வருகிறது. இந்த கடையில்மது அருந்திவிட்டு பார் நடத்தி வரும் பரமன் என்பவரிடம் பாரின் வெளிப்புறத்தில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். பரமன் மூவரில் ஒருவரை அடித்து வெளியே அனுப்பிய நிலையில் பரமனின் நண்பர்களான மான்சிங்ராஜா,
அருள் அசோக், போஸ், ஆகிய நான்கு பேரும் மாயனை டாஸ்மார்க் கடை பின்புறம் தூக்கிச் சென்று சரமாரியாக அடித்து உள்ளனர். இதில் மயக்கமடைந்த நிலைக்குச் சென்ற மாயன் இறந்துள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த நகர் காவல் துறையினருக்கு சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மாயனை உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். குடிபோதையில் தகராறு ஏற்பட்டதில் பாரின் உரிமையாளர் மற்றும் போஸ் மான்சிங்ராஜா, அருள்அசோக் ஆகிய நான்கு பேரும் அடித்து கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது இதனையடுத்து நான்கு மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி