ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.

71பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு 15 வது நாளாக அனைத்து கௌரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வு பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 7300 க்கும் மேற்பட்ட அனைத்து கௌரவ விரிவுரையாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 25 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு கல்லூரிகளின் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். உயர் நீதிமன்றம் பணி நிரந்தரம் மற்றும் யூசிஜி பரிந்துரைத்த ஊதிய உயர்வு 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் மெத்தனப் போக்கில் செயல்படுவதால் தமிழக முழுவதும் அனைத்து கௌரவ விரிவுரையாளர்கள் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு அனைத்து கௌரவ விரிவுரையாளர்கள் 15 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பி, தங்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி