விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒ. மேட்டுப்பட்டியில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியனின் 16 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர். பி உதயகுமார், கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி உள்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சுந்தரபாண்டியனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுகவை பொறுத்தவரையில் அண்ணா முதல் அனைவருமே தமிழ் மொழியை தன் இமை போல் காத்தவர்கள் என்றார்.
மேலும் அதிமுகவை பொருத்தமட்டில் இரு மொழி கொள்கை தான் எங்கள் உயிர் மூச்சு என்ற நிலைப்பாட்டில் கொள்கையோடு நடந்து வருகிறோம் எனவும் திமுகவை சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தி வருகிறார்கள் எனவும் இதை அரசியலாக்கி இன்றைக்கு இரு மொழி கொள்கை தான் எங்கள் கொள்கை என்று சொல்லி கபட நாடகம் ஆடுகிறார்கள் என விமர்சனம் செய்தார்.
மேலும் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த விவகாரம் எதிரொளித்து திமுக ஆட்சி வீட்டுக்கு சென்றால் தான் நமக்கு விடிவு காலம் என்றார்.