தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்காக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநாடு சிறப்பாக நடைபெற வழிகாட்டவும், சட்டரீதியிலான உதவிகளை வழங்கவும் வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டால், வழக்கறிஞர் அணி சட்டரீதியலான உதவிகளை செய்வார்கள். 234 தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.