தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த தீபா கர்மாகர், "எனது ஆரம்பகால பயிற்சியாளர் ஒருவர் என்னை எருமை என்று சொல்லி தொடர்ச்சியாக கேலி செய்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கல பதக்கம் வென்று என்னை கேலி செய்தவர்களுக்கு நான் பதிலடி கொடுத்தேன். என்னை எருமை என்று கிண்டலடித்த பயிற்சியாளர் நான் பதக்கம் வென்ற பிறகு பூங்கொத்துகளுடன் என்னை வரவேற்க்க விமான நிலையம் வந்தார்" என்று தெரிவித்துள்ளார்.