ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் அருவி

56பார்த்தது
ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் அருவி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இங்கு நீர்வரத்து 8,000 கன அடியில் இருந்து 18,000 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், அருவிகளில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் உயரும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி