சிவகாசி: திமுக கழகம் சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம்...

70பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகர தி. மு. க. வின் 1வது பகுதி கழகம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் திருத்தங்கல்லில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு திருத்தங்கல் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பொன்சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட கழக துணைச் செயலாளர் ராமமூர்த்தி, வர்த்தக அணி இன்பம், முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வனராஜா, மாநகர செயலாளர் எஸ். ஏ. உதயசூரியன் கலந்து கொண்டு பேசினர். மாநகர செயலாளர் எஸ். ஏ. உதயசூரியன் பேசுகையில், பெண்களின் நலனை பேணும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் திராவிட மாடல் அரசானது, பெண்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், மீண்டும் தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைய அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் சரவணக்குமார், வெயில்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை 1வது பகுதி கழக செயலாளரும் திமுக கவுன்சிலருமான அ. செல்வம் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி