Pure 24-காரட் தங்கத்தோடு வடிவமைக்கப்பட்ட ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில், பிரேக் லிவர்கள், மிரர் ஸ்டாக்ஸ், பில்லியன் ஃபுட்ரெஸ்ட்கள், கிராப் ஹேண்டில்கள், வீல் ரிம் மற்றும் சைட் ஸ்டாண்ட் ஆகியவை தங்கத்தால் ஆனவையாகும். டெலஸ்கோபிக் ஃபோர்க், ஸ்விங்கார்ம் மற்றும் ரியர் மோனோஷாக் ஸ்பிரிங் ஆகியவைக்கு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இந்த வண்டி விற்பனைக்கு இல்லாமல், ஓலா நிறுவனம் நடத்தும் போட்டியில் வெல்வோருக்கு பரிசாக வழங்கப்படும்.