PSLV C60 ராக்கெட் வரும் 30ம் தேதி விண்ணில் பாய தயாராகி வருகிறது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தால் உருவாக்கப்பட்ட சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான சிறிய ஆராய்ச்சி தொகுப்பின் (CROPS) ஒரு பகுதியாக, வெப்பக் கட்டுப்பாட்டுடன் மூடப்பட்ட பெட்டி அமைப்பில், எட்டு காராமணி விதைகளை வளர்க்கும் ஆராய்ச்சியிலும் இந்த பி.எஸ்.எல்.வி சி 60 ராக்கெட்டுகள் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.