ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை BEML நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் அளித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 & 5ல் ஓட்டுநரின்றி இயக்கப்படும் 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ.3,657.53 கோடி மதிப்பில் BEML நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.