பாக்ஸிங் டே டெஸ்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை எதிர் கொள்ள திட்டம் வைத்துள்ளேன் என ஆஸ்திரேலிய அணியின் இளம் தொடக்க வீரர் சாம் கான்ஸ்டாஸ் (19) கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "நான் பும்ராவுக்கு எதிராக திட்டம் வைத்துள்ளேன். ஆனால் அதை தற்போது என்னவென்று சொல்ல மாட்டேன். பந்து வீச்சாளர்களை கடும் நெருக்கடிக்குள் கொண்டு வர முயற்சிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.