சென்னையில் குடும்ப பிரச்சனையில் மகன் வெட்டியதால் இரண்டு கைகளும் துண்டான பெண்ணிற்கு, ஒரே நேரத்தில் இரு கைகளுக்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கைகளை இணைத்து சாதனை படைத்துள்ளனர். 23 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் 8 மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ரூ.10 லட்சம் மதிப்பிலான இந்த சிகிச்சை, முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.