NH44 என்பது இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரை 4112 கி.மீ நீளம் கொண்டது. இந்த நெடுஞ்சாலை 11 மாநிலங்களையும், 30 முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. முன்பு இந்த நெடுஞ்சாலை NH7 என அழைக்கப்பட்டது. இந்தியாவின் குறுகிய நெடுஞ்சாலை NH47A ஆகும். இது வில்லிங்டன் தீவு மற்றும் கொச்சி நகரங்களை இணைக்கிறது. இதன் நீளம் சுமார் 6 கி.மீ மட்டுமே.