RBI ஹவுஸ் பிரைஸ் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின்படி நாட்டின் முன்னணி நகரங்களில் 10 ஆண்டுகளில் வீடுகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலான தரவுகளின்படி பெங்களூருவில் 106%, அகமதாபாத்தில் 87%, கொல்கத்தாவில் 64%, கொச்சியில் 82%, சென்னையில் 81% வீடுகளின் விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையைப் போலவே வீடுகளின் விலையும் அதிகரித்திருப்பதால் வீடு வாங்க நினைக்கும் மிடில் கிளாஸ்-ன் கனவு கானல் நீராகி உள்ளது.