அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்தில் சப்வே மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று (டிச.22) பெண் ஒருவர் உயிருடன் தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. ரயிலில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அந்த பெண்ணை அவருக்கு எதிரே அமர்ந்திருந்த நபர் தீ வைத்து கொளுத்தியுள்ளார். பின்னர் கீழே இருந்து இறங்கி ரயில் பெட்டியின் வாசலில் அருகே இருந்த சேரில் அமர்ந்து அப்பெண் எரிவதை வேடிக்கை பார்த்துள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.