அருப்புக்கோட்டை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கனக ஜெயந்தி(38). இவருக்கும் இவரது உறவினர் ஜனனி(27) என்பவருக்கும் இடையே இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக கனக ஜெயந்தி தரப்பினரும் ஜனனி தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இரு தரப்பினரும் மாறி மாறி அளித்த புகாரின் அடிப்படையில் டவுன் போலீசார் நேற்று ஜீலை 27 இருதரப்பை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.