1979-ல் அசாமின் பிரம்மபுத்திரா ஆற்றங்கரை பகுதியில் ஜாதவ் பயேங் என்பவர் சாதாரண மண் பகுதியில் மரங்களை நட்டார். மரங்கள் வளராமல் போனதால் மண்ணை செழுமைப்படுத்த எறும்புகளை கையால் பிடித்து வந்து அந்த பகுதியில் விட்டு, மண்ணை வளமாக்கி 550 ஹெக்டேர் அளவுக்கு காட்டை உருவாக்கினார். தற்போது அமெரிக்க பள்ளிப் பாட புத்தகத்தில் ‘பாரஸ்ட் மேன் ஆஃப் இந்தியா' என்கிற தலைப்பில் இவர் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது.