சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2013ஆம் ஆண்டு உருவான திரைப்படம் 'மதகதராஜா'. இந்த படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், இன்று (ஜன.5) மதகதராஜா படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் விஷால், மெலிந்த உடல் தோற்றத்தில் பெரிய அளவு கண்ணாடியை அணிந்து வந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “விஷாலுக்கு என்னாச்சு?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், விஷாலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.