மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் கரும்பாறை முத்தையா கோயில் உள்ளது. இங்கு ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 56 ஆடுகள் பலியிடப்பட்டு, 400 கிலோ அரிசியில் அன்னதான உணவு சமைக்கப்பட்டது. இந்த விருந்தில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். சாப்பிட்டப் பின்பு இலையை எடுக்காமல் அப்படியே விட்டு செல்வது வழக்கம். இந்த நிகழ்வில் பெண்களுக்கு அனுமதி கிடையாது.