பீகார்: வரதட்சணை கொடுமை வழக்கில் குற்றவாளியை கைது செய்ய சென்ற போலீசாரை தடுத்து உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்பங்கா மாவட்டம் அபண்டா கிராமத்தில் வசிக்கும் ஜிதேந்திர யாதவை கைது செய்ய போலீஸ் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது. அப்போது, அவரது குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் போலீஸ் அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 4 அதிகாரிகள் காயமடைந்தனர்.