மாரியம்மன் கோவிலுக்கு சென்ற மனைவி மாயம்

81பார்த்தது
மாரியம்மன் கோவிலுக்கு சென்ற மனைவி மாயம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தூங்காரெட்டிபட்டியை சேர்ந்தவர் கணேஷ் (32), இவர் மனைவி விஜயலட்சுமி (30) வுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மனைவி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால்
மாயமாகியுள்ள மனைவியை கண்டுபிடித்து கொடுக்க வேண்டி சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமாகியுள்ள விஜயலட்சுமியை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி