மதுக்கடைகளை மூடிவிட்டால் மது இல்லாத சமுதாயத்தை படைத்து விடலாம் என்பது சாத்தியமான ஒன்று கிடையாது. மதுக்கடைகளை மூடினால், கள்ளச்சாராயம் பெருகும். கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழக்க நேரிடும். எனவே பிரச்சனையின் ஆணிவேரை சரி செய்யாமல் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் ஆபத்துதான். முதலில் குடிக்கு அடிமையானவர்களை முழுமையாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அனைவருக்குமான சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.