விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ராமுத்தேவன்பட்டியை சேர்ந்தவர் சுந்தரராஜ் (61), இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. நேற்று (05.06.2024) மது வாங்க மனைவி முத்துலட்சுமியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு மனைவி கொடுக்க மறுக்கவே வீட்டின் அருகே இருக்கும் கருவேல மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.