மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்த பெண்கள்

80பார்த்தது
மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்த பெண்கள்
அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்; நூற்றுக்கணக்கான பெண்கள் மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பித்தனர்.

டிசம்பர் 31
அருப்புக்கோட்டை நகராட்சியில் கடந்த 10 தினங்களாக ஒவ்வொரு பகுதி வாரியாக மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த முகாமின் இறுதியாக புளியம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்
1, 2, 13, 14, மற்றும் 15 வது வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை நகர மன்ற தலைவர் சுந்தரலட்சுமி துவக்கி வைத்தார். இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மணக்களை பெறுவதற்காக நகராட்சித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மின்வாரியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என 10 அரசு துறை சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பல அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தாலும் மகளிர் உரிமை தொகை விடுபட்டிருந்த மற்றும் நிராகரிக்கப்பட்ட பெண்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தனர். இந்த முகாமில் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி