சொக்கநாதர் கோவில் சனி பிரதோஷ விழா

77பார்த்தது
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையதுறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலில் பிரதோஷ நிகழ்ச்சி நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அருள்மிகு நந்திகேஸ்வரர் பெருமானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி திருமஞ்சனம், அரிசி மாவு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்கள் உடன் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தீப தூப மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி