சேலம்: தினமும் மது போதையில் தன்னையும் தனது தாயாரையும் அடித்து துன்புறுத்தும் தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி சீருடையில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி ஒருவர் நேற்று (டிச. 23) புகாரளித்தார். அவர் கூறும்போது, "என்னை பள்ளியை விட்டு நிறுத்துவிடுவேன் என மிரட்டும் தந்தை என் அக்காவை ஏற்கனவே பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.