கும்பகோணத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் எட்டு விருட்சங்கள் உள்ளன. கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் சிவயோகநாதர் திருக்கோயில் 8 தல விருட்சங்கள் இருக்கும் அதிசயத்தை காணலாம். வன்னி, உந்துவில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, பரசுவில்வம் என இங்கு 8 மரங்கள் உள்ளன. ஆலயங்களில் நுழைந்த உடனேயே முதலில் கொடிமரம் இருக்கும். ஆனால் இங்கு ஆலயத்தின் நுழைவில் நந்தி முதலில் உள்ளது. கருவறையில் உள்ள லிங்க திருமேனியின் மேல் 7 சடைகள் காணப்படுகின்றன.