இந்தியாவில் ஆட்சி செய்து வந்த அரசர்கள் தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட நாணயங்களை பயன்படுத்தினர். வெள்ளி நாணயங்கள் சமஸ்கிருதத்தில் 'ரூபாயா' என அழைக்கப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தானாக இருந்த பேரரசர் ஷெர்ஷா சூரி தன் நாணயங்களுக்கு 'ரூபி' என பெயர் வைத்தார். பின்னர் ஆங்கிலேயர்களின் காலத்தில் இந்த சொல் இந்திய நாணயங்களை குறிக்கும் சொல்லாக பயன்பட்டது. பின்னர் அது மருவி ரூபாய் என பயன்படுத்தப்பட்டு வருகிறது.