சிவகங்கை: 100 நாள் வேலைத்திட்டத்தில் தொடர்ந்து பணி வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் மனு அளித்துள்ளார். இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலத்திற்கு அரணையூரைச் சேர்ந்த மக்களுடன் சேர்ந்து வந்த சீமானின் தாயார் அன்னம்மாள், 100 நாள் வேலைத் திட்டத்தில் தொடர்ந்து பணி வழங்கக் கோரி மனு அளித்துள்ளார். இச்சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.