கோவை தடாகம் அருகே வரப்பாளையம் பகுதியில் தனியார் நிலத்தில் பெண் காட்டு யானை ஒன்று அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளது. யானை குட்டி தனியாக இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அதனை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, தாய் யானை உயிரிழந்தது தெரியவந்துள்ளது. யானை உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனை முடிவிலேயே தெரியவரும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.