பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் தேனி கஞ்சா வழக்கு தொடர்பாக, மதுரை போதைப்பொருள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் 15 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை உடன் சவுக்கு சங்கருக்கு மதுரை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.