ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள், உலகின் 3வது பெரிய கார் தயாரிப்பாளராக இணைவதாக அறிவித்துள்ளன. ஜப்பானின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹோண்டா மற்றும் நிசான் ஆகியவை ஒன்றிணைந்து கூட்டு நிறுவனமாக செயல்படுவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளன. இரு நிறுவனங்களும் தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், 2026 ஆகஸ்ட் மாதத்திற்குள் இணைப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளன.