அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி கிழக்கு தெரு பகுதியில் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில்
உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மின் மோட்டார் கடந்த 20 தினங்களுக்கு முன் பழுதடைந்தது. இந்த மின் மோட்டார் இன்று வரை சரி செய்யப்படாமல் படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஒரு குடம் உப்பு தண்ணீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மின் மோட்டாரை சரி செய்து அங்கு உடனடியாக தண்ணீர் பிடிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.