சாலையில் தேங்கி காணப்படும் மழைநீர்

55பார்த்தது
அருப்புக்கோட்டையில் நேற்று பெய்த கனமழை காரணமாக இன்று ஆகஸ்டு 20 புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலையில் எஸ். பி. கே கல்லூரி செல்லும் சாலையில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது. ‌ இவ்வழியாக தினமும் ஏராளமான இருசக்கர வாகனங்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் சென்று வருகின்றனர்.
மழைநீர் தேங்கி இருப்பதால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், மாணவ மாணவியர்கள் & மக்கள் சிரமம் அடைகின்றனர். இப்பகுதியில் ஒரு சில நேரங்களில் முழங்கால் அளவு மழை நீர் தேங்கி நிற்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். எனவே இப்பகுதியில் மழைநீர் தேங்காதவாறு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை‌ விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி