அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் பிற்பகல் வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி ராமானுஜபுரம், கோபாலபுரம், கோபிளாங்குளம், செம்பட்டி, ஆத்திபட்டி, காந்திநகர் கஞ்சநாயக்கன்பட்டி, ராமசாமிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரவலான மழை பெய்தது. பிற்பகல் வேளையில் பெய்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் சற்று சிரமம் அடைந்தனர். மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது அருப்புக்கோட்டையில் அடுத்தடுத்து பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த மழை காரணமாக நகரில் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அதேபோல மாலை வேளையிலும் சிறிது நேரம் தூரல் மழை பெய்தது.