தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த 13 வயது மகன்

53பார்த்தது
தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த 13 வயது மகன்
சீனாவைச் சேர்ந்த ஃபுஜியன் மாகாணத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் அவசர சிகிச்சை மையத்தை அழைத்து, தனது கர்ப்பிணித் தாய்க்கு பிரசவ வலி ஏற்படுவதாக கூறியுள்ளார். ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால், செல்போனில் மருத்துவ உதவியாளர் சென் சாயோஷூனின் ஆலோசனையின் படி, தனது தாய்க்கு பிரசவம் பார்த்துள்ளார். அதில் தாய்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறிது நேரத்தில், மருத்துவ உதவியாளர்கள் வந்து தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

தொடர்புடைய செய்தி