விழுப்புரம் மாவட்டம், கோலியனூர், வெ. அகரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. சம்பவத்தன்று உடற்கல்வி ஆசிரியர் செங்கேணி, 11 வயது மாணவரை தாக்கினார். இதில் சிறுவனின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். சிறுவனுக்கு, மண்டையை பிளந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவ்விஷயத்தில் தொடர்புடைய எச்.எம் பணியிடமாற்றமும், ஆசிரியர் செங்கேணி பணியிடைநீக்கமும் செய்யப்பட்டனர். கைது நடவடிக்கை கேட்டு உறவினர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.