மியான்மரில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு பொதுமக்களை பீதியில் உறைய வைத்துள்ளது. மியான்மரில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று (மார்ச்.29) காலை 11.53 மணிக்கு 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, மதியம் 02.51 மணியளவில் 19 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. மேலும், மணிப்பூரில் மதியம் 02.31 மணிக்கு 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.