ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ம் தேதி உலக கொசுக்கள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று அருப்புக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசுக்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவர் கோமதி தலைமையில் நடைபெற்ற இந்த உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் எனது வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுப்பேன் எனவும், மேலும் மற்றவர்களுக்கும் எனக்குத் தெரிந்த கொசு ஒழிப்பு முறைகளை கற்றுத் தருவேன் எனவும் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.