அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் ஒரு வீட்டில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சொக்கலிங்கபுரம் திருமேனி மடத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு ஜோதிபுரத்தைச் சேர்ந்த பாண்டி கணேசன்(56) என்பவர் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து பாண்டி கணேசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ 57, 120 மதிப்புடைய 1680 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.