அவசர சூழலில் பசியை போக்கக்கூடியது. சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம். உடல் சூட்டை தணித்து புத்துணர்ச்சியை தரும். காலையில் அவல் சாப்பிட்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம். குழந்தைகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது. நீரிழிவு நோயாளிகள் பசிக்கும் போது கொஞ்சம் அவல் சாப்பிடலாம். அவலை வைத்து உப்புமா, கஞ்சி, பாயாசம், புட்டு போன்றவை செய்யலாம். சிறு தானிய அவல் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.