அருப்புக்கோட்டையில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை

67பார்த்தது
அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 20 மாலை வேளையில் கருமேகங்கள் இடி மின்னலுடன் அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விட்டு விட்டு கனமழை பெய்தது. அருப்புக்கோட்டையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குளு குளு சூழல் நிலவுகிறது. எனினும் கனமழை காரணமாக நகரின் பல இடங்களில் மழை நீரோடு கலந்து சாக்கடை நீர் ஆங்காங்கே தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி