*வரும் சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் திமுக வெற்றி பெற கட்சியினர் பணியாற்ற வேண்டும்; அருப்புக்கோட்டையில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற தெற்கு ஒன்றிய திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்*
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வேல்ராஜன் மண்டபத்தில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் வருவாய் துறை அமைச்சருமான கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு திமுக கட்சி ஆக்கப் பணிகள் குறித்து கட்சி தொண்டர்களிடையே சிறப்புரையாற்றினார். மேலும் இந்த கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியிட்டதற்கும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற கட்சியினர் பணியாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் ரமேஷ், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலகணேஷ், தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.