மன அழுத்தத்தை குறைக்க யோகா, உடற்பயிற்சி, தியானம் மூச்சுப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாத விஷயங்களை திரும்ப திரும்ப நினைக்காமல், எப்போதும் பாஸிட்டிவாக இருக்க வேண்டும். மனதை அழுத்தும் விஷயங்கள் பற்றி, நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேச வேண்டும். குறைந்தபட்சம் 8 மணிநேரம் ஆழ்ந்து தூங்க வேண்டும். தூங்குவதற்கு 30 நிமிடங்கள் முன் செல்போனை அணைத்துவிட வேண்டும். வெள்ளை நிற உடைகள் அணிவது மன அழுத்ததை குறைக்கும்.