கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஹா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூர்யா 44’. 2டி நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் 15 நிமிடக் காட்சி ஒன்றை ஒரே டேக்கில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அந்தக் காட்சியில் வசன உச்சரிப்பு, பாடல், சண்டை என அனைத்துமே கலந்து இருக்கும் என்கிறது படக்குழு. இந்தக் காட்சிக்காக முன் தயாரிப்பு செய்யப்பட்டு, ஒரே டேக்கில் முடிக்கப்பட்டுள்ளது.