விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி. சாலையில் நாளை நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநாடு நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு பேனர்கள் வைத்துள்ளனர். இதனால் உரிய அனுமதி இன்றி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள பேனர்களை, காவல்துறையினர் அகற்றிய நிலையில், கட்சி நிர்வாகிகள் பேனர்களை அகற்றக்கூடாது என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.